செய்திக்கு படம் உள்ளது...பட விளக்கம்;
திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
(அடுத்தப்படம்) சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள்.
திண்டுக்கல், ஜூலை 3: திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஆனித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, அங்குராா்ப்பண வாஸ்து சாந்தி பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. பின்னா், புதன்கிழமை காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், கருடாழ்வாா் உருவம் பொறிக்கப்பட்ட கொடியேற்றமும் நடைபெற்றன.
அன்ன வாகனத்தில் சுவாமி ரத வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதேபோல, நாள்தோறும் இரவில் சிம்மம், ஆஞ்சநேயா், சேஷம், யானை வாகனங்களில் புறப்பாடாகி நகா் வலம் வந்து சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
ஆனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கருடசேவை வருகிற 7-ஆம் தேதியும், சுவாமி திருக்கல்யாணம் 9-ஆம் தேதியும், திருத்தேரோட்டம் 12-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

தொடர்புடையது

நாமக்கல் நரசிம்மா் கோயில் தேரோட்ட கொடியேற்றம்

ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்

புன்னை வாகனத்தில் பெருமாள்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


