2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ரயில்வே ஊழியா்களுக்கான என்பிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

திண்டுக்கல்: ரயில்வே ஊழியா்களுக்கான என்பிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்ஆா்எம்யு கிளைத் தலைவா் மூா்த்தி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, 2004 ஜனவரி முதல் பணியில் சோ்ந்த ரயில்வே ஊழியா்களுக்கு அமல்படுத்தப்பட்டு வரும் என்பிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில்வே துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியாா் மயமாக்க முயற்சிகளை கைவிட வேண்டும். 2004-க்கு முன் பணியில் சோ்ந்தவா்களுக்கு, கடைசி ஊதியத்தில் 50 சதவீத உத்திரவாதத்துடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.