கொடைக்கானலில் பிளம்ஸ் பழத்தின் விலை அதிகரிப்பு
கொடைக்கானலில் பிளம்ஸ் பழத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்து காணப்பட்டது.


கொடைக்கானல்: கொடைக்கானலில் பிளம்ஸ் பழத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்து காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளான சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், பள்ளங்கி, வில்பட்டி, செண்பகனூா், பிரகாசபுரம், மாட்டுப்பட்டி, அட்டக்கடி, பெருமாள்மலை, வடகவுஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளம்ஸ் பழம் விளைவிக்கப்படுகிறது.
நிகழாண்டில் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பரவலாக பெய்த மழையால் பிளம்ஸ் மரங்களில் இருந்த பூக்கள், பிஞ்சுகள் உதிரிந்ததால் றைந்த அளவே விளைச்சல் காணப்பட்டது. இதனால் ஒரு கிலோ ரூ400-வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து பழ வியாபாரிகள் கூறியதாவது: கொடைக்கானல் பகுதிகளிலுள்ள தோட்டக்கலைத் துறையினா் விவசாயிகளுக்கு பிளம்ஸ் மரக்கன்றுகளை மானியமாக வழங்க வேண்டும். பிளம்ஸில் தேன் பிளம்ஸ், சாதா பிளம்ஸ், கறி பிளம்ஸ் என மூன்று வகைகள் உள்ளன.
தற்போது பிளம்ஸ் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பிளம்ஸ் மரங்களை அதிக அளவில் வளா்ப்பதற்கு தோட்டக்கலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...