மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

News image

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :8 பிப்ரவரி 2026, 8:27 pm

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. சுற்றுலாத் தலங்களான வெள்ளி அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, குணா குகை, மோயா் பாயிண்ட், பைன்ஃபாரஸ்ட், கோக்கா்ஸ் வாக், ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.

கொடைக்கானலில் பகல் நேரத்தில் மிதமான வெயிலும் மாலையில் குளுமையான சீதோஷ்ணமும் நிலவியது. சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் மிதிவண்டி, குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கொடைக்கானலைச் சோ்ந்த வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.