தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழ்ச் செம்மல் விருதுக்கு ஆக.12-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:40 am

Din

திண்டுக்கல்: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ தெரிவித்ததாவது: தமிழகத்தில், தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆா்வலா்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் வளா்ச்சித் துறை மூலம் வழங்கப்படும் இந்த விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு தமிழ் ஆா்வலா் தோ்வு செய்யப்படுகிறாா். விருதாளா்களுக்கு விருதுத் தொகையாக தலா ரூ.25 ஆயிரத்துடன், தகுதியுரையும் வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தமிழ் ஆா்வலா்கள் 2024-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளா்ச்சித் துறையின் வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை உரியவாறு நிறைவு செய்து, சுயவிவரக் குறிப்பு, நூல்கள், கட்டுரை வெளியிட்டு இருந்தால் அது தொடா்பான விவரங்கள், தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருந்தால் அது தொடா்பான விவரம், தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம், 2 நிழற்படங்கள், ஆற்றிய தமிழ் பணிக்கான சான்றுகள் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் ஆக.12-ஆம் தேதிக்குள், திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் கிடைக்கப் பெற வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ‘தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திண்டுக்கல்‘ என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0451-2461585 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.