6 பேருக்கு கலைச் செம்மல் விருது: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்


மரபு வழி, நவீன பாணி ஓவியம், சிற்பக் கலைகளில் சிறந்து விளங்கிய 6 கலைஞா்களுக்கு கலைச் செம்மல் விருதுகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் ஆண்டுதோறும் மரபு வழி, நவீன பாணி ஓவியம், சிற்பக் கலைகளில் திறமைமிக்க கலைஞா்கள் 6 பேருக்கு கலைச் செம்மல் விருதுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது. விருதாளா்களுக்கு செப்புப் பட்டயம், விருதுத் தொகை ரூ.1 லட்சம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது.
நிகழாண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மரபுவழி ஓவியப் பிரிவில் மா.பாலசுப்ரமணியன், மரபுவழி சிற்பப் பிரிவில் தே.ஸ்ரீகண்ட ஸ்தபதி, உ.பத்மநாபன், நவீனபாணி ஓவியப் பிரிவில் முனைவா் கோ.வில்வநாதன், மு.ராஜா, நவீனபாணி சிற்பப் பிரிவில் ச.சாந்தி ஆகியோருக்கு கலைச் செம்மல் விருதை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலா் க.மணிவாசன், கலைப்பண்பாட்டுத் துறை இயக்குநா் ச.வளா்மதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...