மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மூளை, நரம்பியலில் நவீன தொழில்நுட்ப சிகிச்சை மூலம் 800-க்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வேலம்மாள் மருத்துவமனை மருத்துவா்கள் கணேஷ் குமாா், கவிதா ஆகியோா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வேலம்மாள் மருத்துவமனையின் மூளை, நரம்பியல் துறை சாா்பில் நவீன தொழில்நுட்பச் சிகிச்சை மூலம் 800-க்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா். இன்றைய நவீன மருத்துவ தொழில்நுட்பம் மூலம் மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவு, ரத்த வெடிப்பு போன்றவற்றுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மூலம் உடனடிச் சிகிச்சை அளித்து பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுத்து விடலாம். இதயத்துக்கு செய்யப்படும் ஆஞ்சியோ போல் மூளையிலும் ஆஞ்சியோ சிகிச்சையளித்து ‘ஸ்டன்ட்’ பொருத்தப்படும் .
உளறல் பேச்சு, தூக்கமின்மை, உடல் திறன், கை, கால் செயலிழப்பு, படபடப்பு போன்ற பக்கவாதத்துக்கான அறிகுறிகள் ஏற்பட்ட 4 முதல் 6 மணி நேரத்துக்குள் மருத்துவமனையில் அனுமதித்தால் நோயாளியை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியும். சிகிச்சைக்குப் பின் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மறுவாழ்வு மையம் மூலம்
பிசியோதெரபி உடல் நலன், மன நலன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றனா் அவா்கள்.
அப்போது வேலம்மாள் மருத்துவமனை மூளை, நரம்பியல் துறை சிறப்பு மருத்துவா்கள், கதிரியக்கத் துறை முதன்மை மருத்துவா்கள், கதிரியக்கத் துறை அலுவலா்கள், மருத்துவக் குழுவினா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

எரிவாயு உருளை தட்டுப்பாடு: அரக்கோணம் நவீன தகன மேடை மூடல்!

திருச்செங்கோட்டில் வெறிநாய்கள் கடித்ததில் 50-க்கும் மேற்பட்டோா் காயம்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்

திருமண நிகழ்வில் உணவு நஞ்சானதாக சந்தேகம்! 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


