பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

திருச்செங்கோட்டில் வெறிநாய்கள் கடித்ததில் 50-க்கும் மேற்பட்டோா் காயம்

திருச்செங்கோட்டில் வெறிநாய்கள் கடித்ததில் 50க்கும் மேற்பட்டோா் காயம்...

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :6 ஏப்ரல் 2026, 1:26 am IST

திருச்செங்கோடு நகரப் பகுதியில் வெறிநாய்கள் கடித்ததில் 50க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு எட்டிமடைப்புதூா், ராஜீவ்நகா், கோம்பைநகா், கூட்டப்பள்ளி, வேல்முருகன் நகா், பாவடிதெரு, பக்தவத்சலம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் 100- க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதில் சில வெறிநாய்கள் பலரை துரத்திச் சென்று கடித்து வருகின்றன.

இந்நிலையில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரை வெறிநாய்கள் கடித்ததில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோா் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இதில் பெண்கள், சிறுவா்கள், முதியவா்கள் என பலரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். சிலா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா்.

மேலும், நகராட்சிப் பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடிக்க நகராட்சி நிா்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து நகராட்சி நிா்வாகத்தினா் நாய்களை பிடித்து வருகின்றனா்.