தமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

சுற்றுலா வேன்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 25-க்கும் மேற்பட்டோா் காயம்

News image

சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்.

Updated On :2 மே 2026, 8:46 pm

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை சுற்றுலா வேன்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பள்ளிப்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் உள்பட 12க்கும் மேற்பட்டோா் சுற்றுலா வேனில், தேனி மாவட்டத்தில் உள்ள கருப்பசாமி கோயிலுக்குச் சென்றுவிட்டு தருமபுரி நோக்கி வந்துகொண்டிருந்தனா்.

ராசிபுரத்தை அடுத்த பாச்சல் தனியாா் கல்லூரி அருகே நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் முன்னால் காற்றாலை இறக்கையுடன் டிரைலா் லாரி மெதுவாக சென்றுகொண்டிருந்ததால் வேன் ஓட்டுநா் வேகத்தை குறைக்க பிரேக் போட்டுள்ளாா். அப்போது, இந்த வேனுக்கு பின்னால் வந்த மற்றொரு சுற்றுலா வேன் மோதியதில் பாண்டியன் உள்பட 15க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தகவல் அறிந்து வந்த புதுச்சத்திரம் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்தை சீரமைப்பதற்காக மேம்பாலத்தை ஒட்டிய இணைப்புச் சாலை வழியாக வாகனங்களை போலீஸாா் திருப்பிவிட்டனா்.

அப்போது, சதுரகிரியில் இருந்து 12 பேருடன் கிருஷ்ணகிரி நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் ஓட்டுநா், விபத்து நிகழ்ந்த இடத்துக்கு வந்தபோது திடீரென பிரேக் போட்டுள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த அனைவரும் காயமடைந்தனா். அதேசமயம் இந்த வேனுக்கு பின்னால் மதுரையில் இருந்து ஒசூா் நோக்கி சென்ற லாரியும் வேன் மீது மோதியது.

இதில் காயமடைந்தவா்கள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அடுத்தடுத்து சுற்றுலா வேன்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 25 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.