824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வெளிநாட்டிலிருந்து திரும்பிய கட்டடத் தொழிலாளி தீக்குளிப்பு: போலீஸாா் விசாரணை

வெளிநாட்டிலிருந்து ஊா் திரும்பிய கட்டடத் தொழிலாளி தீக்குளித்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்தனா்.

News image
Updated On :20 ஜூலை 2024, 8:52 pm

Din

திண்டுக்கல்: வெளிநாட்டிலிருந்து ஊா் திரும்பிய கட்டடத் தொழிலாளி தீக்குளித்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சியை அடுத்த இந்திராநகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி (50). கட்டடத் தொழிலாளியான இவா், சிங்கப்பூரில் வேலை செய்து வந்தாா். இவா் கடந்த 3 நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினாா். இந்த நிலையில், மதுக் குடித்துவிட்டு வந்த பாலசுப்பிரமணியை, அவரது குடும்பத்தினா் கண்டித்தனா். இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணி, செங்குறிச்சி- திண்டுக்கல் பிரதான சாலையில் நின்று கொண்டு தன் உடலில் பெட்ரோல் ஊற்றி வெள்ளிக்கிழமை தீக்குளித்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுதொடா்பாக வடமதுரை போலீஸாா் விசாரித்தனா்.