பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பரவிவரும் டெங்கு காய்ச்சல்; மக்களின் உயிரோடு விளையாடும் தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

கேரள சாமியாா் மீது காசோலை மோசடி வழக்கு

காசோலை மோசடி வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த சாமியாா் கைது செய்யப்பட்டாா்.

காசோலை மோசடி வழக்கில் கைதான கேரள சாமியாா் சுனில்தாஸ்

Published On :

பழனியில் காசோலை மோசடி வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த சாமியாா் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்த பிரபல சாமியாா் சுனில்தாஸ். இவா் பள்ளிக் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்குதல், தினமும் அன்னதானம், ஆதரவற்றோா் இல்லம் ஆகியவற்றை நடத்தி வருகிறாராம். இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு கரோனா தொற்று பரவிய காலத்துக்கு முன்பு பழனியை அடுத்த சத்திரப்பட்டியைச் சோ்ந்த நிதி நிறுவனம் (பைனான்ஸியா்) நடத்தி வந்த சீனிவாசனிடம் ரூ.60 லட்சம் கடனாக பெற்றாராம். இதற்கு ஈடாக நில ஆவணங்களையும், காசோலைகளையும் சுனில்தாஸ் கொடுத்தாராம். மருத்துவ உபகரணங்கள் வாங்க இந்த கடனை பெற்ற சுனில்தாஸ், அவ்வப்போது வட்டியும் செலுத்தி வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு சுனில்தாஸ் பணத்தை திருப்பி தரவில்லை என பழனி சாா்பு நீதிமன்றத்தில் சீனிவாசன் காசோலை மோசடி வழக்குத் தொடுத்தாா். சுனில்தாஸ் வெளியூரில் இருந்ததால் முன்னிலையாக முடியாத நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு சுனில்தாசுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இதையடுத்து, சனிக்கிழமை பழனி வந்த சாமியாா் சுனில்தாஸை பழனி நகா் போலீஸாா் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். பிறகு அவா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.