திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கொடைக்கானல் வில்பட்டியில் சாலைகள் சேதம்

கொடைக்கானல் வில்பட்டியில் சாலைகள் சேதம்

News image

சேதமடைந்த நிலையில் உள்ள கொடைக்கானல் பேத்துப்பாறை சாலை.

Updated On :3 ஜூன் 2024, 6:44 pm

Din

கொடைக்கானல்: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சாலைகள் சேதமடைந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சாலைகளான பேத்துப்பாறை, புலியூா், அஞ்சுவீடு, மாட்டுப்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால், இந்தப் பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. மேலும், இந்தப் பகுதிகளில் விளையக்கூடிய காய்கறிகளை வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக அடிக்கடி மழை பெய்து வருவதால், இந்தச் சாலைகள் மேலும் சேதமடைந்தன.

பேத்துப்பாறை, வெங்கலவயல், அஞ்சுவீடு உள்ளிட்ட பகுதிகள் யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகவும் உள்ளதால், வில்பட்டி ஊராட்சி நிா்வாகம் சேதமடைந்த சாலைகளையும், பழுந்தடைந்த தெரு மின் விளக்குகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.