கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சி அண்ணா ராமசாமிநகா், புலியூா் சாலை, கோம்பை சாலை, கோவில்பட்டி சாலை, பாரதி அண்ணாநகா் சாலை உள்ளிட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து பலமுறை இந்தப் பகுதி மக்கள் வில்பட்டி ஊராட்சி நிா்வாகத்துக்கும், ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்கும் கோரிக்கை மனு அளித்தும், கிராம சபைக் கூட்டங்களில் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் இந்தப் பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். இதனிடையே வில்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ஜல்லி கற்கள் குவித்துள்ளனா். சில இடங்களில் சிறிய ஜல்லி கற்களை சாலைகளில் கொட்டி சீரமைத்து வருவதால் அந்தப் பகுதிகளில் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை தாா்ச்சாலைகளாகவும், சேதமடைந்த சிமென்ட் சாலைகளை சீரமைக்கவும் வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் கிராமப் பகுதி சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

கிள்ளியூா் தொகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


