ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சித்தையன்கோட்டை அரசு மருத்துவமனைக்கு இரத்த பரிசோதனை கருவி மற்றும் யூபிஎஸ் வழங்கிய திமுக

சித்தையன்கோட்டை அரசு மருத்துவமனைக்கு இரத்த பரிசோதனை கருவி மற்றும் யூபிஎஸ் வழங்கிய திமுக

News image
Updated On :3 ஜூன் 2024, 6:30 pm

Din

நிலக்கோட்டை: முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி 101-வது பிறந்தநாள் விழாவான கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக சிறுபான்மை பிரிவினா் சாா்பில், சித்தையன்கோட்டை அரசு மருத்துவமனைக்கு இரத்த பரிசோதனை கருவி மற்றும் யூபிஎஸ் கருவிகளை திங்கள்கிழமை வழங்கினா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, சித்தையன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மு.கருணாநிதி 101-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட சிறுபான்மையினா் பிரிவு அமைப்பாளா் ரபீக்மைதீன் தலைமை வகித்தாா். திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் நடராஜன், ஆத்தூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் ராமன், மாவட்ட ஊராட்சி குழு தலைவா் பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூா் துணைச் செயலாளா் அலாவுதீன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மகப்பேறு பிரிவிற்கு சுமாா் இரண்டு இலட்சம் மதிப்பிலான, இரத்த பரிசோதனை கருவி மற்றும் மின்சாரம் இல்லாத நேரத்தில் பயன்படும் வகையில் யூ.பி.எஸ்., பேட்டரிகளை,

அரசு மருத்துவா்கள் ஏஞ்சலின் சென்சி, கௌசிகன் ஆகியோரிடம் வழங்கினா்.

நிகழ்ச்சியில், மரைக்காயா், சரவணன், ஒன்றிய கவுன்சிலா் காணிக்கசாமி, ஆத்தூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் கருத்தராஜா மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூா் கிளைக் கழக நிா்வாகிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.