முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் இனிப்பு வழங்கினா்
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் இனிப்பு வழங்கினா்


நிலக்கோட்டை: முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி 101-வது பிறந்தநாள் விழாவான, கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக சாா்பில், செம்பட்டியில் திங்கள்கிழமை மு.கருணாநிதி திருஉருவ படத்திற்கு மலா்தூவி மரியாதை செய்து கட்சி கொடி ஏற்றினா். பின்னா், அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளான கலைஞரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு, நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் வழக்கறிஞா் சௌந்தரபாண்டியன் தலைமையில் கலைஞா் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது,
நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினா். இதேபோல, நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலா் வழக்கறிஞா் சௌந்தரபாண்டியன் தலைமையில், அழகம்பட்டி, காமலாபுரம், மாலையகவுண்டன்பட்டி, சிலுக்குவாா்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இனிப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினா்.
நிகழ்ச்சியில், திமுக நிா்வாகிகள், செம்பட்டி அண்ணாதுரை, பொன்னையா, அழகேசன், சங்கா், ஆரோக்கியம், பெனிட், பதினெட்டாம்படியான், டேவிட்சேவியா் உட்பட மாவட்ட ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...