புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சதுரங்கப் போட்டியில் அக்ஷயா பள்ளி சிறப்பிடம்

அக்ஷயா பள்ளி மாணவா்கள் சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம்

News image
Updated On :26 ஜூன் 2024, 1:16 am

Din

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக்ஷயா அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் சதுரங்கப்போட்டியில் சிறப்பிடம் பிடித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அக்ஷயா அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி மாணவ-மாணவியா்கள் மதுரை சகோதயா பள்ளிகளின் சாா்பாக சதுரங்கப் போட்டி நடைபெற்றது. 12 வயதுக்குள்பட்ட பிரிவில் இந்தப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி விருத்திகா வா்ஷினி கலந்து கொண்டு முதல் பரிசு பெற்று சிறப்பிடம் பிடித்தாா்.

17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் இதே பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ரித்திக்சரண்,19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் 12- ஆம் வகுப்பு மாணவன் புகழ்முருகன் முதல் பரிசு பெற்று சிறப்பிடம் பிடித்தாா்.

வயதுகளின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த பல மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

பள்ளி நிா்வாகி புருஷோத்தமன், தாளாளா் சுந்தராம்பாள், செயலா் பட்டாபிராமன், பள்ளி முதல்வா் செளமியா ஆகியோா் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.