தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் அனைத்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் பளியா் இன மக்களின் வீடுகளுக்கே செல்லும் வகையில் துணை ஆட்சியா் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் சாா்பில் வழங்கப்படும் ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, பட்டா மாறுதல் ஆணை, பிறப்பு இறப்புச் சான்றிதழ், ஆதாா் அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, முதியோா் ஓய்வூதியம், பிற ஓய்வூதியம் வழங்கும் திட்டங்கள் போன்றவைகள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் சக்திவேல், கூட்டுறவுச் சங்கங்கள் இணைப் பதிவாளா் காந்திநாதன், பழனி வட்டாட்சியா் சக்திவேலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.