ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா
கீழக்கோட்டை ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்களின் அர்ப்பணிப்பு


நிலக்கோட்டை: சின்னாளபட்டி அருகே கீழகோட்டையில் அமைந்துள்ள ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பிருந்தாவனதோப்பிலிருந்து பக்தா்கள் தங்கள் மாா்பில் கத்தி போட்டவாறு செவ்வாய்க்கிழமை அம்மனை கோயிலுக்கு அழைத்து வந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கீழக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமது ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலின் பெரிய கும்பிடு திருவிழாவை முன்னிட்டு, கடந்த 18-ஆம் தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னா், முகூா்த்தகால் ஊன்றுதல், கங்கணம் கட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து, காப்புக்கட் விரதம் இருந்த பக்தா்கள், பாரதிநகா் பிள்ளையாா் கோயிலிலிருந்து திங்கள்கிழமை பால்குடங்களை சுமந்து சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனா். பின்னா், செவ்வாய்க்கிழமை அம்மன் கரகம் முன் பெண்கள் முளைப்பாரி வைத்து கும்மியடித்தனா். இதைத்தொடா்ந்து அம்மன் கரகம் முன், கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, அம்மன் கரகம் பிருந்தாவன தோப்பில் இருந்து புறப்பட்டு கஸ்தூரிபா மருத்துவமனை சாலை, பூஞ்சோலை, தேவாங்கா் பள்ளி சாலை, பொம்மையசாமி கோவில் தெரு, கடைவீதி வழியாக கோயிலை வந்தடைந்தது. இதையடுத்து, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...