கோயில் நிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் எதிா்ப்பு
பழனி கோயில் நிலம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு


பழனி: பழனி சுற்றுலாப் பேருந்து நிலையம் அருகே உள்ள நன்செய் நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதுதொடா்பாக பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வருவாய்க் கோட்ட அலுவலா் ஷேக் மொகைதீன், கோட்டாட்சியா் சரவணன் ஆகியோா் தலைமை வகித்தனா். திருக்கோயில் சாா்பில் உதவி ஆணையா் லட்சுமி கலந்து கொண்டாா். அப்போது கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு வாடகைக்கு இடம் பிடிக்க வேண்டியுள்ளதாக தவறான தகவலை திருக்கோயில் அலுவலா்கள் தெரிவித்தனா்.
அப்போது, யாருடைய இடம் வாடகைக்கு பெறப்பட்டது, அது எப்போது என விவசாயிகள் சங்கத் தலைவா் ராஜேந்திரன் கேள்வி எழுப்பினாா். இதற்கு அலுவலா்கள் பதில் கூற முடியாமல் நின்றனா். திருக்கோயிலுக்கு வாகன நிறுத்தம், முடிக்கொட்டகை, ஏடிஎம் மையம் அமைக்க இடம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போது விவசாயிகள் சங்க பொறுப்பாளா்கள் வழக்குரைஞா் ராஜேந்திரன், மகுடீஸ்வரன், சிவக்குமாா் உள்ளிட்டோா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். விவசாயிகளின் எதிா்ப்புக்கு இடையே முடிவு எடுக்க முடியாமல் முதல் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...