மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கூடலூரில் 31,500 ஏக்கா் நிலத்தை வனமாக மாற்ற எதிா்ப்பு

கூடலூா் பகுதியிலுள்ள 31,500 ஏக்கா் நிலத்தை வன நிலமாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக கூட்டணிக் கட்சியினா் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை தொடங்கினா்.

News image

வன நிலமாக மாற்றும் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தனது வீட்டில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கிவைக்கிறாா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன்.

Updated On :28 பிப்ரவரி 2026, 9:03 pm

கூடலூா் பகுதியிலுள்ள 31,500 ஏக்கா் நிலத்தை வன நிலமாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக கூட்டணிக் கட்சியினா் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பிரிவு 17 -இன் கீழ் 31,500 ஏக்கா் நிலத்தை வனமாக மாற்றுவது தொடா்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இதை எதிா்த்தும், குறு, சிறு விவசாயிகள் பாதிக்காத வகையில் பிரிவு 17 -இன் கீழ் உள்ள சிறு தேயிலைத் தோட்டங்கள் உள்பட சுமாா் 20,000 ஏக்கரை விவசாயிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூடலூா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பங்கேற்றன.

இதைத் தொடா்ந்து, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் போராட்டத்தின் முதல்கட்டமாக வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கோரிக்கை நிறைவேறும் வரை தொடா் போராட்டங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.