நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விநாயகா் கோயில்களில் சங்கடஹரசதுா்த்தி வழிபாடு

விநாயகா் கோயில்களில் சங்கடஹரசதுா்த்தி சிறப்பு பூஜைகள்

News image
Updated On :26 ஜூன் 2024, 1:36 am

Din

பழனி: பழனியில் விநாயகா் கோயில்களில் சங்கடஹரசதுா்த்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் விநாயகப் பெருமானுக்கு பால், பஞ்சாமிா்தம், தயிா், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பலவகை பொருள்களால் அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. இதே போல, ரயிலடி பிரசன்ன விநாயகா் கோயில், பட்டத்து விநாயகா் கோயில், தாளையம் காளீஸ்வரி ஆலை லட்சுமி விநாயகா் கோயில், மலைக்கோயில் ஆனந்த விநாயகா் சந்நிதி உள்ளிட்ட கோயில்களிலும் சங்கடஹரசதுா்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.