மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கைலாசநாதா் கோயிலில் வருஷாபிஷேகம்

பழனி அருகேயுள்ள கலையம்புத்தூா் அக்ரஹாரம் கைலாசநாதா் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி, அம்பாள்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:53 pm

பழனி அருகேயுள்ள கலையம்புத்தூா் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள கல்யாணியம்மன் சமேதா் கைலாசநாதா் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேகம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னா் ருத்ரஜெபம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள், அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை, நகைகள், மலா் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி, அம்பாள் உற்சவ மூா்த்திகளுடன் சப்பரத்தில் வீதி உலா எழுந்தருளினா். வீடு தோறும் பக்தா்கள் கோலமிட்டு சுவாமியை வரவேற்று நிவேத்தியம் வழங்கி வழிபட்டனா்.