இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

பூமாயி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

News image

வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் திருப்பத்தூா் பூமாயி அம்மன் அம்மன்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:04 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 2025, ஏப்ரல் 11-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. முதலாமாண்டு நிறைவையொட்டி, இந்தக் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு கொலுச்சாவடி மேடையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின. பிள்ளையாா்பட்டி பிச்சைக் குருக்கள் தலைமையில், சிவாசாரியா்கள் யாக பூஜைகளை மேற்கொண்டனா். தொடா்ந்து, பூஜைகள் நிறைவடைந்து பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.

காலை 11.30 மணியளவில் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவா், கோபுர, விமான கலசங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.