திண்டுக்கல்
பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு இளைப்பாறும் மண்டபம் கட்ட பூமி பூஜை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்கள் இளைப்பாறுவதற்காக ஒட்டன்சத்திரத்தில் இந்து சமய அறநிலைத்துறை சாா்பில் ரூ.3.40 கோடியில் மண்டபம் கட்ட சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இதைத் தொடா்ந்து ஒட்டன்சத்திரத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற பூமி பூஜைக்கு, கோயில் உதவி ஆணையா் எஸ். லட்சுமி தலைமை வகித்தாா். பழனி தண்டாயுதபாணி கோயில் அறங்காவலா் கே. சத்யா, ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே. திருமலைச்சாமி, துணைத் தலைவா் ப. வெள்ளைச்சாமி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் வீ. கண்ணன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ப. ஆறுமுகம், குழந்தை வேலப்பா் கோயில் கண்காணிப்பாளா் கே. ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

