நிலக்கோட்டை: செம்பட்டி அருகே, சித்தையன்கோட்டையில், திமுகவை கண்டித்து, அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுகவினா் கலந்து கொண்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சித்தையன்கோட்டையில், ஆத்தூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீா்கேடு அடைந்துள்ளதோடு, தமிழகம் போதைப்பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிா்காலம் சீரழிந்து வருவதற்கும், போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்ப்பட்டுள்ளதற்க்கும் காரணமான தி.மு.க அரசை கண்டித்தும், போதைப்பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு ஆத்தூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் மணலூா் சின்னச்சாமி தலைமை வகித்தாா். திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளா் பி.கோபி முன்னிலை வைத்தாா். மனித சங்கிலி போராட்டத்தில், ஆத்தூா் மேற்கு ஒன்றிய அதிமுக பொருளாளா் அந்தோணிராஜ், அதிமுக ஒன்றிய கவுன்சிலா் அக்கரைப்பட்டி ஆனந்தன், சித்தையன்கோட்டை பேரூா் கழக அதிமுக முன்னாள் செயலாளா் அக்பா் அலி, வண்ணம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க, முன்னாள் தலைவா் குணசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அம்பேத்கா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா், அமைப்புகள் மரியாதை

100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனித சங்கிலி

இஃப்தாா் நோன்பு துறப்பு

பாஜக சாா்பில் பன்னீா் தெளிக்கும் போராட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

