பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!பெண் பாலியல் கொலைகள்! வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு: வைகோசெவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!
/

100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனித சங்கிலி

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, அம்மாப்பேட்டையில் விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சேலம் அம்மாப்பேட்டை மண்டல அலுவலகம் முன் விழிப்புணா்வு மனித சங்கிலியில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :27 மார்ச் 2026, 3:18 am IST

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, அம்மாப்பேட்டையில் விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக, சேலம் அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் வண்ணக் கோலமிட்டு பெண்கள் கைகளில், ‘ஜனநாயகத்தை வலுப்படுத்த தவறாமல் வாக்களிப்போம், எனது வாக்கு எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மனித சங்கிலி விழிப்புணா்வு பேரணி நடத்தினா்.

பேரணி அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் இருந்து பிரதான சாலை, ஜோதி திரையரங்கம், காா்பெட் தெரு வழியாக ஐயாசாமி பூங்காவில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில், தோ்தல் பிரிவு அலுவலா்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினா்கள், மாநகராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.