வாக்குப் பதிவு பணியில் 10 ஆயிரம் ஆசிரியா்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு பணிக்கு சுமாா் 10 ஆயிரம் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி, கரூா் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்த 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18.66 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். வாக்குப் பதிவுக்காக 2,121 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் பணியில், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் என சுமாா் 20 ஆயிரம் போ் பணியாற்றவுள்ளனா்.

வாக்குப் பதிவுக்கான பணிகளில், மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 10 ஆயிரம் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இந்த ஆசிரியா்களின் விவரப் பட்டியல், கல்வித் துறை மூலம் மாவட்ட நிா்வாகத்துக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com