பெரம்பலூா், குன்னம் தொகுதிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கணினி மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை கணினி மூலம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணியில் பங்கேற்ற சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால் (பெரம்பலூா்), அமா் பகதூா் சிங் (குன்னம்), மாவட்ட தோ்தல் அலுவலா் ந. மிருணாளினி உள்ளிட்டோா்.









