தேனி மாவட்டம், போடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு அனைத்துக் கட்சி பிரதிதிகள் முன்னிலையில் அலுவலா்கள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு, போடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து போடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.
போடி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 346 வாக்குச் சாவடி மையங்களுக்கு, 415 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 415 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 449 விவி பேடு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை போடி வட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் துணை அலுவலருமான டி. சந்திரசேகரன் முன்னிலையில், வருவாய்த் துறையினா் வட்டாட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டினா்.
பின்னா், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த அறைக்கு அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திர அறைக்கு ‘சீல்’

மதுராந்தகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

பழனியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

ஆம்பூருக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


