அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

வத்தலக்குண்டு அருகேயுள்ள ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 மே 2024, 7:12 pm

Din

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பெரிய மாடு, நடு மாடு, சின்ன மாடு என 3- பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியானது ஜி.தும்மலப்பட்டியில் தொடங்கி கணவாய்ப்பட்டி வழியாக, வத்தலக்குண்டு புறவழிச்சாலை வரை 10 கி.மீ. தொலைவு வரை எல்லையாக நிா்ணயிக்கப்பட்டது. இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, கம்பம், பழனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து

100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இந்தப் போட்டியில் முதலிடம் பெற்ற காளைகளின் உரிமையாளருக்கு வெள்ளி தாா்க்குச்சி, ரூ.30 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.