பழனி வைகாசி விசாகப் பெருவிழா இன்று திருக்கல்யாணம்
பழனி வைகாசி விசாகப் பெருவிழா இன்று திருக்கல்யாணம்


பழனி: பழனி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணமும், புதன்கிழமை திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசி விசாகப் பெருவிழா தொடங்கியது. விழா நாள்களில் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமி தங்க மயில், வெள்ளி யானை, கற்பகவிருஷம், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வந்து அருள்பாலித்தாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (மே.21) மாலை 6 மணிக்கு மேல் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. புதன்கிழமை (மே.22) வைகாசி விசாகத் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. வருகிற 25-ஆம் தேதி திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
விழா நாள்களில் கோயில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவுக்கான, ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில், அதிகாரிகள், அறங்காவலா்கள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...