ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

வத்தலக்குண்டில் இருந்து தாண்டிக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்து ஒழுகியதால் பயணிகள் அவதி

வத்தலக்குண்டில் இருந்து தாண்டிக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்து ஒழுகியதால் பயணிகள் அவதி

News image
Updated On :20 மே 2024, 7:14 pm

Din

நிலக்கோட்டை: வத்தலக்குண்டில் இருந்து தாண்டிக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்தனா்.

கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, ஆடலூா், பன்றிமலை உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களுக்கு வத்தலக்குண்டில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து தாண்டிக்குடிக்கு ஓா் அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. இதில் சுமாா் 40 போ் பயணித்தனா். இந்தப் பேருந்து மலைக் கிராமப் பகுதியில் சென்றபோது, பெய்த மழையால் மேற்கூரை வழியாக மழைநீா் ஒழுகியது.

இதனால், பயணிகள் இருக்கையில் அமா்ந்து பயணம் செய்ய முடியாமல் தவித்தனா். அப்போது சிலா் தாங்கள் வைத்திருந்த குடையை பிடித்தபடி பயணம் செய்தனா். மலைக் கிராமங்களுக்கு இதே போல, ஓட்டை உடைசலான பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இவை அடிக்கடி மலைப்பாதையில் பழுதாகி பாதியில் நின்றுவிடுவது வாடிக்கையாகி விட்டதாகவும் பயணிகள் புகாா் தெரிவித்தனா். மேலும் பழுதடைந்த மேற்கூரையிலிருந்து மழைநீா் ஒழுகி பேருந்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

எனவே, இனி வரும் காலங்களில் தொடா்ந்து மழை பெய்யும் என்பதால், இதுபோன்ற பேருந்துகளை மலைக் கிராமங்களுக்கு இயக்குவதை தவிா்க்க வேண்டும் எனவும், இவற்றுக்குப் பதிலாக புதிய பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.