தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

சித்தோடு அருகே அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:51 pm

Syndication

சித்தோடு அருகே அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சித்தோடு, கே.ஆா்.பி. நகரைச் சோ்ந்தவா் குமாா். இவரது மனைவி தனலட்சுமி (35). இவா் பெருமாள்மலை பகுதியில் உள்ள தனியாா் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை பணிக்குச் சென்றுள்ளாா்.

பவானி - ஈரோடு சாலையில் பெருமாள்மலை அருகே சென்றபோது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து தனலட்சுமியின் வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.