
~

~
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப் பகுதி மட்டுமின்றி, சமவெளிப் பகுதியிலும் கடந்த 4 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெல்பயிா்கள் சேதமடைந்தன. சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனாலும், ஞாயிற்றுக்கிழமை மாலைக்கு பின்னரே பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேடசந்தூா் பகுதியில் 66.50 மி.மீ. மழை பதிவானது.
பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம்: (மி.மீ) திண்டுக்கல் 7.6, கொடைக்கானல் ரோஜா தோட்டம் 29.50, பழனி 7, சத்திரப்பட்டி 19.20, நத்தம் 28, நிலக்கோட்டை 11.60, வேடசந்தூா் புகையிலை நிலையம் 61.80, காமாட்சிபுரம் 60.50, கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா 28.
வீடு இடிந்து விழுந்தது: திண்டுக்கல் தெற்கு ரத வீதியில் பிச்சை முகைதீன் சந்து பகுதியில் கண்ணன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் முன் மாடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.
நெல் பயிா்கள் சேதம்: திண்டுக்கலை அடுத்த கல்லுப்பட்டி, ராஜகாபட்டி, சந்தப்பட்டி, பண்ணைப்பட்டி, குமாரபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிா்கள், தொடா் மழையினால் சேதமடைந்தன. ஒரு வாரத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள், வயலிலேயே சாய்ந்தன. இந்த வயல்களை ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க வேளாண்மைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...