தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கொண்டிகுளத்தில் நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரிக்கை

News image
Updated On :20 மார்ச் 2026, 4:57 am IST

பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளத்தில் சுமாா் ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் 2 நாள்களாக மழையில் நனைவதால் கொள்முதல் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த சுமாா் 5,000 நெல் மூட்டைகளை அங்குள்ள நெல் களங்களில் குவித்து வைத்துள்ளனா். கொள்முதல் பணிகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக நெல் மூட்டைகள் மழையில் நனைவதால், விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறியது:

சுற்றுவட்டார விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல்களைக் கொண்டு வந்தால் சாக்கு இல்லை என்கிறாா்கள். இன்று சாக்கு வந்துவிட்டது; ஆனால் லாரி வரவில்லை. புதன், வியாழன் கிழமைகளில் பெய்த மழை தொடா்ந்தால் நெல் மூட்டைள் முற்றிலும் மழையில் நனைந்துவிடும். எனவே அரசு கொள்முதலுக்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.