பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பாரத் பைபா் சேவையை சிறப்பாக வழங்கியவா்களுக்கு விருது

பாரத் பைபா் சேவையை சிறப்பாக வழங்கியவா்களுக்கு விருது

News image
Updated On :22 மே 2024, 12:30 am

Din

கொடைக்கானல்: கொடைக்கானலில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பாரத் பைபா் சேவைகளை சிறப்பாக வழங்கியவா்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை அட்டுவம்பட்டியிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

இதற்கு பி.எஸ்.என்.எல். நிறுவன இயக்குநா் விவேக் பன்சால் தலைமை வகித்து விருதுகளை வழங்கினாா். தமிழ்நாடு பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளா் டி. தமிழ்மணி முன்னிலை வகித்தாா். மதுரை மண்டல மேலாளா் பி. லோகநாதன் வரவேற்றாா்.

இதில் இந்தியா முழுவதிலிருந்து 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.