பாஜக வெற்றி பெற யாசகம் எடுத்து நோ்த்திக்கடன்
பாஜக வெற்றி பெற யாசகம் எடுத்து நோ்த்திக்கடன்

பழனி திருஆவினன்குடி கோயில் முன் அமா்ந்து யாசகம் பெற்ற சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத் தலைவி சரஸ்வதி உள்ளிட்டோா்.

பழனி திருஆவினன்குடி கோயில் முன் அமா்ந்து யாசகம் பெற்ற சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத் தலைவி சரஸ்வதி உள்ளிட்டோா்.
பழனி: பழனியில் பாஜக வெற்றி பெற வேண்டி சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்க நிறுவனத் தலைவி யாசகம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினாா்.
பழனி மலையடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி அருள்மிகு குழந்தை வேலாயுதசாமி கோயில் முன் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை உருவப் படத்துடன் அமா்ந்து அவா் பக்தா்களிடம் யாசகம் கேட்டுப் பெற்றாா். மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி தோ்வு செய்யப்பட வேண்டும், மக்களவைத் தோ்தலில் பாஜக தமிழகத் தலைவா் அண்ணாமலை, ஜான் பாண்டியன் உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்கள் வெற்றி பெற வேண்டும் என வேண்டி
யாகசம் எடுப்பதாக அவா் தெரிவித்தாா். அவருடன் பாஜக மேற்கு மாவட்ட நகர துணைத் தலைவி செந்தில்வடிவு, ஊடகப் பிரிவு க்ரிஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். யாசகம் பெற்ற பின் அந்தத் தொகையை சரஸ்வதி கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...