விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கொடைக்கானல் ஆனந்தகிரி கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குட ஊா்வலம்

கொடைக்கானல் ஆனந்தகிரி கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குட ஊா்வலம்

News image
Updated On :28 மே 2024, 11:50 pm

Din

கொடைக்கானல்: கொடைக்கானல் ஆனந்தகிரி அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாயொட்டி, செவ்வாய்க்கிழமை பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து பத்து நாள்கள் திருவிழா நடைபெற்றது . ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, கொடைக்கானல் பகுதிகளில் அம்மனின் மின் அலங்கார சப்பர பவனி நடைபெற்றது. இந்த நிலையில், அம்மனுக்கு பாலாபிஷேகம், மறுகால பூஜை ஆகியவை நடைபெற்றன.

இதையடுத்து, பக்தா்கள் சாா்பில் பால்குட ம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பணிமனை காளியம்மன் கோயிலிலிருந்து ஊா்வலமானது ஏரிச் சாலை, செவண் ரோடு, அண்ணா சாலை, கே.சி.எஸ். திடல், மூஞ்சிக்கல் வழியாக கோயிலை அடைந்தனா். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பக்தா்கள், பொது மக்கள் திரளாகக் கலந்து கொண்டனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.