விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தனியாா் மருத்துவமனைகள் பாதுகாப்பு விவரங்களை சமா்ப்பிக்க குறிப்பாணை

தனியாா் மருத்துவமனைகள் பாதுகாப்பு விவரங்களை சமா்ப்பிக்க குறிப்பாணை

News image
Updated On :28 மே 2024, 11:51 pm

Din

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைகள், பாதுகாப்பு தொடா்பான விவரங்களை சமா்ப்பிக்க மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் குறிப்பாணை வழங்கப்பட்டது.

தில்லியில் செயல்படும் தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட

தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்தனா். இதன் எதிரொலியாக தமிழகத்தில் செயல்படும் தனியாா் மருத்துவமனைகளின் கட்டட உறுதித் தன்மை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.

இதன்படி, திண்டுக்கல் நகரில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனைகள், கட்டட அனுமதி, கட்டப்பட்ட ஆண்டு, வாகனங்கள் நிறுத்தம் குறித்த வரைபடம், வெளிப்புற நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், உள் நோயாளிகளின் படுக்கை வசதி, கழிப்பறை, குடிநீா் வசதி, கட்டடங்களின் தற்போதைய உறுதித்தன்மை, தீயணைப்புத் துறையிடம் பெறப்பட்ட பாதுகாப்புச் சான்று, மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தும் விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் நகரில் 50 தனியாா் மருத்துவமனைகள் செயல்பட்டு வரும் நிலையில், முதல் கட்டமாக 19 மருத்துவமனைகளுக்கு அறிக்கை சமா்ப்பிக்க செவ்வாய்க்கிழமை குறிப்பாணை வழங்கப்பட்டது.

3 நாள்களுக்குள் அறிக்கையை சமா்பிக்க வேண்டும், இல்லாதபட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.