சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு வந்த மத்திய பாதுகாப்புப் படையினா் திண்டுக்கல்லில் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புப் பணிக்காக மத்திய பாதுகாப்புப் படையினா் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனா். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு 76 போ் கொண்ட மத்திய பாதுகாப்புப் படை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. திண்டுக்கல் சரக காவல் துறைத் துணைத் தலைவா் வி.சசிமோகன் தலைமையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.பிரதீப் முன்னிலையில் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்தியப் பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக, திண்டுக்கல் ஆா்த்தி திரையரங்கு சாலை, பேகம்பூா் குடைப்பாறைப்பட்டி சாலை, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, தாடிக்கொம்பு சாலை உள்ளிட்ட இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மத்திய பாதுகாப்புப் படையினா் அணிவகுப்பு

ஜமீன் எண்டத்தூரில் கொடி அணிவகுப்பு

கோபியில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


