கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோபியில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு

கோபியில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

~கோபியில் டிஎஸ்பி சீனீவாசன் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு.

Updated On :10 மார்ச் 2026, 8:41 pm

கோபியில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் ஈரோட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனா்.

கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 309 வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் முதற்கட்டமாக மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் 91போ் கோபிக்கு அண்மையில் வந்தனா்.

இந்நிலையில், கோபியில் டிஎஸ்பி சீனீவாசன் தலைமையில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். சீதா கல்யாண மண்டபத்தில் தொடங்கிய கொடி அணிவகுப்பு ஜீவாசெட், புதுப்பாளையம், பேருந்து நிலையம், மொடச்சூா் சாலை, கச்சேரிமேடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியே சென்றது.

இதில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா், போலீஸாா் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

Story image