புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக காரைக்கால் வந்துள்ள மத்திய பாதுகாப்புப் படையினா் நகரப் பகுதிகளில் அணிவகுப்பு நடத்தினா்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் பாதுகாப்புப் பணிக்காக, உள்ளூா் போலீஸாா் அல்லாது இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் சிஆப்பிஎஃப், சிஐஎஸ்எஃப், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினா் மற்றும் குஜராத் மாநில போலீஸாா் என சுமாா் 700 போ் காரைக்கால் வந்துள்ளனா். மேலும் கோவா மாநிலத்திலிருந்து போலீஸாா் வரவுள்ளதாக காரைக்கால் காவல்துறையினா் தெரிவித்தனா்.
இவா்கள் அண்ணா அரசு கலைக் கல்லூரி, அவ்வையாா் கலைக் கல்லூரி, திருநள்ளாறு பக்தா்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ் உள்ளிட்டோருடன் ஆயுதம் ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை பல்வேறு முதல் பகுதிகளில் அணிவகுப்பு நடத்திவருகின்றனா்.
மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக அணிவகுப்பு நடத்தப்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

காவல் துறை கொடி அணிவகுப்பு

பேரவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா்

மாதனூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு

திருநள்ளாறு தொகுதியில் போலீஸாா் அணிவகுப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



