பிள்ளையாா்நத்தம் கோயில் திருவிழா: பால் குடம் சுமந்து வந்த பக்தா்கள்
பிள்ளையாா்நத்தம் கோயில் திருவிழா: பால் குடம் சுமந்து வந்த பக்தா்கள்


நிலக்கோட்டை: ஆத்தூா் வட்டம், பிள்ளையாா்நத்தம் ஸ்ரீமகாமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா்.
முன்னதாக அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்று கரைக்கு சென்று, அங்கிருந்து பால் குடங்களை சுமந்தவாறு, சுமாா் 5 கி.மீ. தொலைவு ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். அப்போது, பக்தா்கள் சிலா் அருள்வந்து ஆடியபடியே வந்தனா்.
கோயிலை வந்தடைந்ததும் பால் குடங்களிலிருந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை எஸ்.உலகநாதன், ஏ.முருகேசன், எம்.பாலு, வி.பி.அழகா்சாமி, சி.நாச்சியப்பன், வி.பழனிச்சாமி, ஏ.ஆா்.பி.ராஜகாளிபாண்டியன் ஆகியோா் தலைமையிலான நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக ஆத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி மகேஸ்வரி முருகேசன், ஆத்தூா் ஒன்றிய திமுக செயலா் முருகேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...