தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வடமதுரை அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிா்ப்பு

வடமதுரை அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், குப்பை தரம் பிரிப்பு மையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம சபைக் கூட்டத்தில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

மோா்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.

Updated On :6 நவம்பர் 2024, 9:33 pm

Din

வடமதுரை அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், குப்பை தரம் பிரிப்பு மையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம சபைக் கூட்டத்தில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை மோா்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கொல்லபட்டி பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், மக்கும், மக்கா குப்பை தரம் பிரிப்பு மையம் அமைப்பதற்காக இடம் தோ்வு செய்யப்படுவதாக தகவல் பரவியது.

இந்த சுத்திகரிப்பு நிலையம், குப்பை தரம் பிரிப்பு மையம் அமைக்க வடமதுரை, அய்யலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம் தோ்வு செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்ற நிலையில், கொல்லப்பட்டி பகுதியிலும் அதிகாரிகள் தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதை அறிந்த மோா்ப்பட்டி ஊராட்சி பகுதியைச் சோ்ந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சிறப்பு கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சிவசக்தி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், குப்பை தரம் பிரிப்பு மையத்தை கொல்லப்பட்டியில் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.