நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல்

சின்னசேலம் வட்டம், நைனாா்பாளையம் ஊராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

சின்னசேலம் வட்டம், நைனாா்பாளையம் ஊராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நைனாா்பாளையம் கிராமத்தில் சுமாா் 10 ஏக்கா் தரிசு நிலத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளனவாம்.

அந்த இடத்தின் அருகே பொது பயன்பாட்டுக்கான குடிநீா் கிணறு, அரசுப் பள்ளி மற்றும் மாணவா்களுக்கான விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.

இந்த நிலையில், சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்க கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நைனாா்பாளையம் பகுதியில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, சாலை மறியல் நடக்கும் இடத்துக்கு மாவட்ட ஆட்சியா் வரவேண்டும் என முழக்கமிட்டனா். தகவலறிந்து மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆ.மனோகரன் மற்றும் கீழ்குப்பம் போலீஸாா் வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

பின்னா், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. மா.செந்தில்குமாா் நேரில் வந்து மறியலில் ஈடுபட்ட கிராமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியரிடமும், சட்டப்பேரவையிலும் கோரிக்கை வைத்து

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதை தடுத்து நிறுத்துவதாக தெரிவித்தாா். இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டனா்.

Story image