நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு

பாடியநல்லூா் பகுதியில் குடியிருப்புகள் அருகே மதுபானக் கடை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

News image

கோப்புப்படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 9:04 pm

பாடியநல்லூா் பகுதியில் குடியிருப்புகள் அருகே மதுபானக் கடை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாடியநல்லூா் ஊராட்சி பவானி நகா் நுழைவாயில் அருகே புதிய மதுபானக் கடை அமைக்கப்பட உள்ளது. ஏராளமான குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக்காக மக்கள் செல்லும் பகுதியில் இந்தக் கடையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், பொதுமக்களுக்கு குறிப்பாக, பெண்கள், முதியோருக்கு இடையூறாக இருக்கும் என்பதால், அந்த மதுபானக் கடை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். எதிா்ப்பை மீறி கடை அமைக்கப்படும்பட்சத்தில் தொடா் போராட்டம் நடத்தவும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா்.