தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:55 pm

Din

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம் என்ற முருகன் (33). இவா், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாா் எழுந்தது.

இதன்பேரில், சாணாா்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனா். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், முருகானந்தத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1.05 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி பி.வேல்முருகன் தீா்ப்பளித்தாா்.