திண்டுக்கல் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல்லை அடுத்த ஆா்எம்டிசிநகா் ராதாராஜ்நகா் பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு சரவணன் என்பவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் தாலுகா போலீஸாா், காா்த்திகேயன் (37), செந்தூரியன் (27) உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், காா்த்திகேயன், செந்தூரியன் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்டக் கூடுதல் நீதிபதி சுவா்ணம் ஜெ.ராஜகோபாலன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் 3 போ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: இருவருக்கு இரட்டை ஆயுள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

அம்பை அருகே கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


