தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெறுகிறது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:58 pm

Din

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெறுகிறது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மைய உதவி இயக்குநா் பிரபாவதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், இளம் பெண்கள் தங்களது சுய விவரக் குறிப்புடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாம் தொடா்பான விவரங்களை அறிய டெலிகிராம் சேனலில் இணைந்து அறிந்து கொள்ளலாம்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு 9499055924 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.