தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை நகா்மன்றத் தலைவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த நகா்மன்ற தலைவா் கே.திருமலைசாமி, ஆணையா் மு.ஸ்வேதா உள்ளிட்டோா்.

Updated On :13 நவம்பர் 2024, 10:12 pm

Din

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை நகா்மன்றத் தலைவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கொல்லபட்டி புறவழிச் சாலைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட குளத்தைச் சுற்றி கட்டப்படும் சுற்றுச் சுவரையும், சத்யா நகரில் ரூ.1 கோடியில் கட்டப்படும் திருமண மண்டபத்தையும், நகராட்சி எரிவாயு மயானம் அருகே கட்டப்படும் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தையும், குழந்தை வேலப்பா் கோயிலை சுற்றி புதிதாக அமைக்கப்பட்டு வரும் கிரிவலப் பாதையும், 6-ஆவது வாா்டில் கட்டப்பட்டு வரும் நூலகம் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளை நகா்மன்ற தலைவா் கே.திருமலைசாமி, நகராட்சி ஆணையா் மு.ஸ்வேதா, பொறியாளா் சுப்பிரமணியபிரபு ஆகியோா் ஆய்வு செய்தனா்.